நீதிமன்றம் சென்றால் தாமதமாகுமாம்! முன்னாள் நீதியரசர் விக்கியின் விசித்திர பதில்

Report Print Sumi in அரசியல்

மந்திகை ஆதார வைத்தியசாலை காணி விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் சென்றால் கால தாமதம் ஏற்படும் என முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று யாழில் இடம்பெற்றது. இதன்போது மந்திகை ஆதார வைத்தியசாலை காணி பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மந்திகை ஆதார வைத்தியசாலைக்கான நிர்மாணப்பணிகள் அனைத்தும் தயாராக இருக்கும் நிலையில் அதற்கான காணியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படுகின்றது.

வைத்தியசாலை காணியை கையகப்படுத்தியுள்ள இராணுவம் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் என்பவற்றால் வைத்தியசாலைக்கான காணியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இதற்காக நீதிமன்றம் சென்று வைத்தியசாலைக்கான காணியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது குறுக்கிட்ட முன்னாள் நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் “நீதிமன்றம் சென்றால் காலதாமதம் ஏற்படும்” என குறிப்பிட்டார்.

நீதியரசராக இருந்த விக்னேஸ்வரனே நீதிமன்றம் சென்றால் தாமதமாகும் என்ற பதிலை தெரிவித்துள்ளார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers