சரத் பொன்சேகா இராணுவ விவகாரங்களில் தலையீடு செய்வதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இராணுவ விவகாரங்களில் தலையீடு செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

தமக்கு அறிவிக்காமல் படையினருக்கு பொன்சேகா அறிவுறுத்தல்களை வழங்குவதாகவும், இடமாற்றம் மற்றும், பதவி உயர்வு குறித்து அவர் தம்முடன் நேரடியாக பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இராணுவத் தளபதி தொடர்பு கொண்டு பேசிய போது, சரத் பொன்சேகா தலையீடு செய்வதாக நேரடியாகவே குற்றம் சுமத்தியுள்ளார்.