முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! கறுப்பு பட்டி அணிந்த ஐ.தே.கட்சி

Report Print Kamel Kamel in அரசியல்

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்திற்கு எதிராக இன்று மாகாணசபையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுயாதீன உறுப்பினர் ஜனக திஸ்ஸகட்டுரியாரச்சி என்பவரினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மாகாணசபையின் தவிசாளர் ஏ.எச் புத்ததாசவினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

34 உறுப்பினர்களைக் கொண்ட ஊவா மாகாணசபையில் ஏழு பேர் மட்டுமே முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் கையொப்பமிட்டிருந்தனர்.

மாகாணசபை உறுப்பினர்களை இழிவு படுத்தும் வகையில் முதலமைச்சர் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்குழு கறுப்பு பட்டி அணிந்திருந்தனர்.

இதேவேளை, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச மற்றும் இரண்டு உறப்பினர்கள் இன்று முதல் மாகாண சபையில் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பை வெளியிட்டே இவ்வாறு சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளனர்.

Latest Offers