“ஊடகவியலாளர்களே கண்ணீர் சிந்த வேண்டாம்” ஜனாதிபதி எச்சரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

ஊடகவியலாளர்களே கண்ணீர் சிந்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மொரகஹாகந்த களுகங்க நீர்த்திட்ட ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எங்களது பணிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காத ஊடகவியலாளர் நண்பர்கள், ஊடக நிறுவனப் பிரதானிகளுக்கு நான் கௌரவத்துடன் கூறிக்கொள்கின்றேன்.

எங்களைத் தாக்கி எங்களைப் பலவீனப்படுத்தி வழங்கப்பட்டிருக்கும் ஊடக சுதந்திரத்தை, மானுட சுதந்திரத்தை இல்லாமல் செய்து கொள்ள வேண்டாம்.

ஊடக சுதந்திரத்தை இழந்து மீளவும் ஓர் நாள் கண்ணீர் சிந்த வேண்டாம். அரசாங்கத்திற்கு எதிரான விடயங்களையே இன்று ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன.

இரவு தொலைக்காட்சியை பார்த்தால் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை என்றே நினைக்க நேரிடும்.

உண்மையை பேச வேண்டும் என்ற நோக்கில் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டது, உண்மையான விடயங்கைள அம்பலப்படுத்துங்கள்.

அரசியல் முரண்பாடுகள் பயனற்ற கலாச்சாரமற்ற விடயங்களை வெளிக் கொணர்வதற்கு இந்த சுதந்திரம் வழங்கப்படவில்லை.

ஊடகவியலாளர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்கு நன்றி பாராட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.