கொழும்பு அரசியலில் இருக்கும் மிகப்பெரிய இரகசியம்! அமைச்சர் மனோகணேசன் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அரசியல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நாங்கள் ஏன் தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும் என்பதில் மிகப்பெரிய இரகசியம் இருப்பதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“கொள்கை ரீதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நாங்கள் எதிர்த்தாலும், வரலாற்று ரீதியில் அதை நோக்க வேண்டியுள்ளது.

ஏனெனில் தமிழ் மக்களை பொறுத்தமட்டில் அதிராகப் பகிர்வு முறையான 13ம் திருத்த சட்டம் ஜனாதிபதியாலேயே கொண்டு வரப்பட்டது.

தமிழ் தலைவர்கள் பல்வேறு கட்டங்களிலும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த போதிலும் அவை எதுவும் வெற்றிபெறவில்லை. நாடாளுமன்ற ஆட்சி முறையில் அனைத்தும் துக்கியெறியப்பட்டுள்ளன.

எனினும், ஜே.ஆர். ஜெயவர்தன ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்தி 13ம் திருத்த சட்டத்தை கொண்டு வந்தார்.

அந்த சட்டம் இதுவரையிலும் முழுமையாக அமுல்படுத்தபடாவிட்டாலும், தமிழ் மக்களுக்கு பெயர் சொல்லும் அடிப்படையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers