அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சங்ககார? மஹேல சுவாரஸ்ய தகவல்

Report Print Murali Murali in அரசியல்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து குமார சங்ககாரவே தீர்மானிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு சற்று முன்னர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கொழும்பு அரசியலில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

இது குறித்து மஹேல ஜயவர்தனவிடம், குறித்த ஊடகம் கேள்வியெழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

“அரசியல் பிரவேசம் குறித்து குமார் சங்ககாரவே தீர்மானிக்க வேண்டும். குறித்த விடயம் தொடர்பில் தன்னால் எதனையும் கூறமுடியாது.

குமார் சங்ககார இலங்கை அணியில் தலைவராக செயற்பட்ட காலத்தில் அரசியல் வாதிகளுடன் முறுகல் நிலை காணப்பட்டது.

இதன் காரணமாக குமார் சங்ககார அரசியலில் பிரவேசிக்க மாட்டார் என எண்ணுவதாக” மஹேல மேலும் குறிப்பிட்டுள்ளார்.