இந்த நாட்டில் ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் யார் இருக்கின்றனர்: அமைச்சர் நவீன்

Report Print Thirumal Thirumal in அரசியல்

இந்த நாட்டின் ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம் இருந்த சூழ்நிலை இப்போது மாற்றம் பெற்று ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ராஜபக்ஷ குடும்பம் என ஆகிவிட்டது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவியேற்றுள்ள அமைச்சர் நவீன் திசாநாயக்காவிற்கு ஹட்டன் நகரில் வரவேற்ப்பளிக்கும் நிகழ்வொன்று நேற்று மாலை இடம்பெற்றது. .

இதனை தொடர்ந்து, அட்டன் கிருஷ்ணபவான் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஆட்சியை நடத்துவதற்கு யார் இருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ அவர் அவரின் மகன்களை நம்பிக் கொண்டு இருக்கின்றார்.

நாமல் ராஜபக்ஷவை தவிர வேறு யார் உள்ளனர் என கேள்வி எழுப்பும் இவர் பொதுஜன பெரமுனவில் வேறு யாரையும் தலைதூக்கவோ அல்லது கட்சியை கொண்டு நடத்தவோ இடமளிப்பார்களா ?

நான் அவ்வாறு அல்ல. காமினி திஸாநாயக்கவின் மகன் என்று அரசியலுக்கு வரவில்லை. உழைப்பினாலும், முயற்சியாலும் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்த வந்துள்ளேன்.

டீ.எஸ்.சேனநாயக்க அவர்களின் வழிநடத்தலின் ஊடாக உருவாகியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நல்ல பல தலைவர்கள் இருந்தனர். தற்போதும் இருக்கின்றனர். ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்தி செல்வதற்குரிய தலைவர்களை உருவாக்கினார்.

ரணசிங்க பிரமதாஸ, லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க என பல தலைவர்களை உருவாக்கினார். இவர்களின் பின் இரண்டாவது தலைமைத்துவத்தை ஏற்று நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல தலைவர்கள் உருவாகியிருக்கின்றனர்.

ரணில் தொடர்பில் மக்கள் தெளிவுப்படவில்லை. ஆகையால் கடந்த காலங்களில் அவருக்கு எதிராக செயல்பட்டார்கள். நானும் ஒரு சில விடயங்களுக்காக அவரிடம் முரண்பட்டேன்.

ஐக்கிய தேசிய கட்சியை நல்ல முறையில் பரம்பரையாக வழிநடத்துவதற்கான முறையான தலைமைத்துவம் வேண்டும் எனும் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் மீண்டும் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.

இவ்வாறாக கட்சி தொடர்பில் அதிக அக்கறை கொண்டு செயல்படும் பொழுது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அடுத்து கட்சியை வழிநடத்துவதற்கு யார் இருக்கின்றனர். அந்த கட்சியில் பண்டாரநாயக்கவின் கொள்கை உள்ளதா ? கை சின்னமும் அங்கு உள்ளதா ? இல்லை. அங்கு இருப்பவர்கள் சதா முசைன், பீட்டோ போன்ற இன்னும் பலர் தான் பல முகங்களை வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆங்கிலத்தில் “கல்ட் பிகர்” என்று சொல்பவர்கள். ஒரு தனி மனிதனால் ஆட்சி செய்யும் அதிகாரத்தை உடையவர்களே இந்த கட்சியில் உள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி அவ்வாறு அல்ல. தனக்கென ஒரு இடத்தை வைத்துக் கொண்டு வேலைத்திட்டம் வேதனை, நம்பிக்கை, கொள்கை போன்றவைகளை மேலோங்கி செயல்பட்டு வருகின்ற ஒரு கட்சியாகும்.

இந்த கட்சியில் நல்ல மூளை வளம் உள்ள வேலைக்கார தலைவர்கள் உள்ளனர். எனவே இந்த நாட்டின் மக்களை ஆட்சிக்கொள்ளும் அங்கீகாரம் மக்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளது என்பதை தெளிவுப்படுத்துகிறேன் என தெரிவித்தார்.

Latest Offers