குட்டிச்சாத்தானை கருவிலேயே கலைத்துவிடுங்கள்! உதய கம்மன்பில கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

பெடரல் எனும் குட்டிச்சாத்தைனை கருவிலேயே கலைத்துவிட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“எதிர்வரும் 7ம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள 20வது திருத்தச் சட்டம் ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான யோசனை கிடையாது.

அது பெடரல் சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான அடித்தளம். 20வது திருத்தத்த சட்டமூல விவாதத்தின் போது புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தையும் இரகசியமாக உட்படுத்தும் நிலையும் இருக்கின்றது.

எனவே, பெடரல் எனும் குட்டிச்சாத்தைனை கருவிலேயே கலைத்துவிட வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.