முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள்! கொழும்பிலிருந்து விக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

Report Print Murali Murali in அரசியல்

தமிழர்களே இலங்கையின் முதல் குடிகள் என்பதை, முடிந்தால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிரூபித்து காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில், சிங்கள மக்களுக்கு முன்னர் தமிழர்களே குடியிருந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திகள் இன்றைய நாளிதழ்களில் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், முடியுமாக இருந்தால் வடமாகாண முதலமைச்சர் இந்த கருத்தை நிரூபித்து காட்டுமாறு சவால் விடுப்பதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.