தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் முக்கிய கலந்தாலோசனை

Report Print Aasim in அரசியல்

தூக்குத் தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இவ்வாரம் நடைபெறவுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மீண்டும் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தூக்குத் தண்டனையை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்? யாரை முதலில் தூக்குத் தண்டனைக்கு உட்படுத்துவது போன்ற விடயங்கள் இவ்வாரம் அலசி ஆராயப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள இந்த கலந்தாலோசனையில் நீதித்துறை , சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Latest Offers