இலங்கை அரசாங்கத்தின் நிதியில் சுற்றுலா மேற்கொண்ட இயன் பெய்ஸ்லி? மற்றுமொரு சிக்கல்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் முன்னாள் அரசாங்கத்திடம் சுற்றுலா லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட இயன் பெய்ஸ்லிக்கு 30 நாள் நாடாளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரை தண்டிக்க வேண்டாம் என்று அவருடைய கட்சியின் சார்பில் சமி வில்சன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கோரியிருந்தார்.

எனினும் இந்த கோரிக்கையை வட அயர்லாந்தின் முக்கிய கட்சியான சின்பெயன் கண்டித்துள்ளது. அத்துடன், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட காலத்தில் இயன் பெய்ஸ்லி மேற்கொண்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளது.

இதேவேளை இயன் பெய்ஸ்லி பிரித்தானிய நாடாளுமன்ற நடைமுறைகளை உதாசீனம் செய்துள்ளதால், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சின்பெய்ன் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இலங்கை அரசாங்கத்திடம் சுற்றுலா லஞ்சம் பெற்றதன் நன்றிக் கடனாகவே இயன் பெய்ஸ்லி, இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கொண்டு வந்த யோசனைக்கும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக சின்பெய்ன் கட்சி குறிப்பிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டில் இயன் பெய்ஸலி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது இலங்கை அரசாங்கத்தின் நிதி அணுசரணையில் சுற்றுலாவை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers