முதலில் உடைந்துள்ள மனங்களை இணையுங்கள்: சமீர பெரேரா ஆலோசனை

Report Print Shalini in அரசியல்

முதலில் உடைந்துள்ள மனதை இணையுங்கள் அதற்கு பிறகு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கோருங்கள் என சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கூட்டு எதிர்க்கட்சிக்குள் முக்கிய மூவரின் மனது உடைந்துள்ளது. ஒருவர் கூறுகின்றார் மஹிந்தவே எனது மனதில் இருக்கின்றார் என்று.

மற்றுமொருவர் கோத்தபாய ராஜபக்ஸவே வரவேண்டும் என கூறுகின்றார்.

வாசுதேவ கூறுகின்றார் தினேசுக்கே தனது ஆதரவு என்று. இவ்வாறு கூட்டு எதிர்க்கட்சிக்குள் பல பிரிவுகள் காணப்படுகின்றன.

ஆகவே முதலில் உடைந்துள்ள மூன்று மனங்களையும் ஒன்று சேருங்கள். அதன் பின்பு எதிர்க்கட்சித் தலைவர் பகுதியை கோருங்கள்.

எமது தரப்பில் 70 பேர் இருக்கின்றார்கள் என அண்மையில் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே சமீர பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.