தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு எதிர்க்கட்சியானது? ராஜித விளக்கம்

Report Print Shalini in அரசியல்

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிகபடியான ஆசனங்கள் கிடைக்கப் பெற்ற காரணத்தினாலேயே எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார் என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிகபடியான ஆசனங்கள் கிடைத்தமையே அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க காரணமாக அமைந்தது.

இவர்கள் நாடாளுமன்றத்தில் சிறந்த எதிர்க்கட்சியினராகவே செயற்படுகின்றனர். பல நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

மாறாக நாடாளுமன்றில் குழப்பங்களை ஏற்படுத்தி மக்களுக்கு செல்லவேண்டிய நன்மையை சென்றடையாதவாறு தடுத்துக் கொண்டிருப்பவர்கள் எதிர்க்கட்சியினராக செயற்பட முடியாது.

ஆனால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது பங்காளிகள் அல்ல. அவர்கள் சிறந்த எதிர்க்கட்சியினரே எனவும் குறிப்பிட்டுள்ளார்.