அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

Report Print Steephen Steephen in அரசியல்

தொடருந்து பணிப்புறக்கணிப்புகளை எதிர்கொள்ள மாற்றுவழியாக தொடருந்து சாரதி பயிற்சி பெற்ற அணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்கு தொடருந்துகளை ஒட்டக்கூடிய சாரதிளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரசாங்கம் எடுத்துள்ள குறித்த அதிரடி முடிவினை பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக பணி நேர கொடுப்பனவுடன் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மாதாந்தம் சம்பளமாக பெறும் தொடருந்து சாரதிகள் திடீரென பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை போக்கும் நோக்கில், மாற்று தொடருந்து சாரதிகளுக்கு பயிற்சியளிக்கப்படும்.

அத்துடன் தொடருந்து சேவையை அத்தியவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானியில் வெளியிடுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது எனவும் அசோக அபேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.