பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உச்ச தண்டனை வழங்குமாறு கோரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

தொடருந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சரளமாக கூறினால், அது ஒரு பயங்கரவாத செயல் என பிரஜைகள் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடருந்து தொழிற்சங்கங்கள் நடத்தும் தற்போதைய போராட்டம் தொழிற்சங்க போராட்டம் அல்ல. அது முழுமையான பயங்கரவைாத நடவடிக்கை.

இடதுசாரிகள் என்ற வகையில் தொழிற்சங்க போராட்டங்களை நாங்கள் மிகவும் நியாயமாக ஒன்றாக பார்ப்பவர்கள். போராட்டங்களை விரும்புகிறவர்கள்.

தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தும் போது அவற்குக்கு ஒழுக்க நெறி என்ற கடப்பாடு உள்ளது. அத்துடன் சட்டரீதியான அடிப்படையும் இருக்கின்றது.

தொழிற்சங்க போராட்டம் என்பது தமது விருப்பு, வெறுப்புகளுக்கு அமைய மேற்கொள்ளப்படுபவை அல்ல.

தொழிற்சங்க போராட்டங்கள் நடத்தும் போது அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் பொதுமக்களுடன் ஒரு இணக்கம் இருக்க வேண்டும். பொதுமக்களுடனான இணக்கத்தை மீறி தாம் விரும்பியது போல் செயற்பட முடியாது.

ஆனால், தற்போது நடைபெறும் தொடருந்து தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பானது, தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு அப்பால் சென்ற அரசியல் சார்ந்தது என்பதை எம்மால் காணமுடிகிறது. எந்த ஒழுக்க நெறியும் சட்ட அடிப்படையும் இன்றி மேற்கொள்ளப்படும் பயங்கரவாத செயல்.

நாட்டில் காணப்படும் ஜனநாயக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பயங்கரவாத செயல். இது ஜனநாயக சுதந்திரத்திற்கு ஏற்படுத்தப்படும் பாரிய ஆபத்து. இதனை தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடியாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தை மலினப்படுத்த இடமளிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். சுதந்திரத்தை மலினப்படுத்த இடமளிக்க வேண்டாம்.

அமுலில் இருக்கும் சட்டத்திற்கு அமைய, இந்த சீர்குலைப்பாளர்களுக்கு, பயங்கரவாதிளுக்கு, பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

கொடுக்கப்பட வேண்டிய உச்ச தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த பயங்கரவாத செயலை தடுக்க உச்ச தண்டனையை வழங்க வேண்டும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.