தென்பகுதி மீனவர்களால் வாழ்வாதாரத்தை இழக்கும் முல்லைத்தீவு மீனவர்கள்

Report Print Dias Dias in அரசியல்

எமது அரசாங்கம் ஆதரவு தெரிவிப்பதன் காரணமாகவே வெளிமாவட்டங்களில் இருந்து வருகைத்தரும் மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.

முல்லைத்தீவு மக்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினை வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மக்களில் 70 வீதமானவர் கடற்தொழிலை நம்பி வாழ்கின்றனர்.

ஆழமான கடற்பரப்பையும் கூடிய அளவான வளங்களையும் கொண்ட பகுதிகளில் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் வெளிமாவட்டமான தென் பகுதியில் இருந்து வருகை தருகின்ற மீனவர்கள் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் நவீனரக உபகரணங்களுடன் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபடுவதன் காரணமாக முல்லைத்தீவு மக்கள் தனது வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், முல்லைத்தீவில் வசிக்கும் மக்கள் போராடித்தான் கடலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் இப் போராட்டத்தில் பெண்களும் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் கடலில் வெடிபொருட்களை பயன்படுத்துவதால் கடல் வளம் முற்றாக அழிவடைகின்றது, சிலின்டர் பயன்படுத்தி மீன் பிடித்தல் மற்றும் வெளிச்சம் பாச்சி மீன் பிடித்தல் மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தல் என தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

அவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம், கடற்படை, நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் துணை நிற்பதன் காரணமாகத்தான் முல்லைத்தீவு மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,