எதிர்ப்பார்த்தது நடந்துவிட்டது: கூட்டு எதிர்க்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்ப்பார்த்ததை போன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீண்டும் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஆளும் கட்சியில் ஒரு பகுதியினர் அமைச்சர்களாக பதவி வகித்த போது, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நிமல் சிறிபால டி சில்வாவுக்கு வழங்கி தற்போதைய நாடாளுமன்றம் முன்னுதாரணத்தை வழங்கியிருந்தது.

எனினும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியை சேர்ந்த மாற்று அணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது என சபாநாயகர் கூறியுள்ளதாகவும் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனே தொடர்வார் எனவும் அந்த பதவியில் மாற்றம் செய்ய தனக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறியுள்ளார்.