கந்தளாய் நகர மண்டபம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

கந்தளாய் நகர மண்டபம் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நகர மண்டபம் நெல்சிப் திட்டத்தின் கீழ் 70 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது முன்னாள் காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.