காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சிறந்த நடவடிக்கை வேண்டும்!சிறீதரன் எம்.பி கோரிக்கை

Report Print Dias Dias in அரசியல்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இந்த நாட்டின் 2008, 2009 ஆம் ஆண்டுகளில் பாரிய அளவிளாக இன அழிப்பு யுத்தம் ஒன்று இந்த மண்ணிலே நடைபெற்றது.

இதன்போது, தமிழ்தேசிய இனத்தை சேர்ந்த மக்கள் அந்த மண்ணிலே வயது வேறுபாடு இன்றி கொல்லப்பட்டனர் எனவும், திட்டமிட்ட இன படு கொலைக்கு உள்வாங்கப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு கொலை செய்தவர்களை விசாரணை செய்ய கோரி கடந்த 9 வருடங்களாக கோரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகின்றது.

அது தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

இந்த வேளை வெளி நாட்டு அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவீர, “இவ்விடயங்களை நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம். இதற்கான முழு பொறுப்புகளையும் நாங்கள் ஏற்கிறோம். தொடர்ந்தும் இதற்கான காரியாலயங்களை அமைக்கிறோம் என வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனால் இன்னும் அவ்வாறான செயற்பாடுகள் நடைமுறை படுத்தப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் மக்களின் எதிர்பார்பையும் நம்பிக்கைகளையும் வீணடிக்கின்றது.

தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்டவரகளின் குடும்ப அங்கத்தினர் இன்று 500வது நாளாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.