இலங்கைக்கு அழகான ஆண்களை அழைத்துவர உடன்படிக்கை!

Report Print Murali Murali in அரசியல்

அழகான ஆண்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சட்டம் இயற்றி நாட்டுக்கு என்ன நடக்கப் போகின்றது என முன்னாள் அமைச்சர் சந்திம வீரகொடி கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தாய்லாந்தில் இருந்து விசா இன்றி இலங்கைக்கு வந்து செல்லும் வகையில் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் தாய்லாந்தில் இருந்து எந்த நபர்களும் விசா இன்றி இலங்கைக்கு வந்து செல்ல முடியும். இவ்வாறு இலங்கைக்கு யார் வரப்போகின்றார்கள் எனவும், யார் மகிழச்சியடைவார்கள் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

எவ்வாறாயினும், அழகான ஆண்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சட்டம் இயற்றி நாட்டுக்கு என்ன நடக்கப் போகின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.