அமைச்சர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரி!

Report Print Vethu Vethu in அரசியல்

அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் எவரும் விமர்ச்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்களை வெளியில் உள்ள ஊடகவியலாளர்களிடம் விமர்சிக்கும் வகையில் அமைச்சர்கள் கருத்து வெளியிடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான தீர்மானங்கள் வெளியில் விமர்சிக்கப்படுவதால், அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு கடும் அழுத்தம் ஏற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தவறான புரிந்துணர்வு மக்கள் மத்தியில் சென்றடைவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தின் போது அமைதியாக இருந்து விட்டு, வாகனத்தில் ஏறி பின்னர் அமைச்சர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகின்றனர். இது தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து ஜனாதிபதி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அரசாங்க செயற்பாடு குறித்து ஏதாவது மாற்று கருத்து இருப்பின் அமைச்சரவை கூட்டத்திலேயே அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என கடுமையாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.