வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் ராஜதந்திரிகள் இரட்டை பிரஜாவுரிமைகளை கொண்டிருக்கக்கூடாது என்ற விடயத்தில் வெளியுறவு செயலாளர் அதிக கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
19வது திருத்தச்சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ராஜதந்திரிகளாக தெரிவு செய்யப்படுகின்றவர்கள், இரட்டை பிரஜாவுரிமைகளை கொண்டிருக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ராஜதந்திரிகளாக உள்ளவர்கள் இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்கு தடையில்லை என்று அண்மையில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் சபாநாயகரிடம் விளக்கமளித்திருந்தார்.
இது வெளிநாடுகளில் உள்ள ராஜதந்திரிகள் விடயத்தில் இரட்டைப்போக்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நோர்வேக்கான இலங்கை தூதுவர் இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்தநிலையிலேயே ஆங்கில செய்தித்தாள் ஒன்று தமது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அதில் இலங்கையின் பல ராஜதந்திரிகளும் அவர்களின் மனைவிமாரும் இரட்டை பிரஜாவுரிமைகளையும் கிரீன் அட்டைகளையும் ஏற்கனவே கொண்டிருக்கின்றனர்.
இதன்காரணமாகவே வெளியுறவு செயலாளர் அந்த விடயத்தில் அதிக கவனத்தை செலுத்த தவறியுள்ளார் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.