முதலமைச்சரை தேடிச் சென்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு யாழ்.கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

வடமாகாணத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் குறித்த குழுவினர் முதலமைச்சரை கேட்டறிந்துள்ளனர்.

புகைப்படங்கள் - சுமி