முன்னாள் ஜனாதிபதிக்கு வாய்ப்புள்ளதா? உயர் நீதிமன்றால் மட்டுமே முடியும்

Report Print Sinan in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதா? என்பது தொடர்பில் உயர் நீதிமன்றால் மாத்திரமே சரியான விளக்கத்தை வழங்க முடியும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இது தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் உயர் நீதிமன்றத்தின் கருத்து என்ன என்பது பற்றி அறிய தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீதிபதி தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி ஏழுப்பியுள்ளார்.