மனோநிலையில் மாற்றம் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியமற்றது!

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

“தென்னிலங்கையில் உள்ளவர்கள் வடகிழக்கு மாகாணங்களை தங்களின் ஆளுகைக்குள் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

இந்த மனோநிலை மாற்றமடையாமல் இலங்கையில் நல்லிணக்கம் என்பது சாத்தியமற்ற ஒன்றாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தன்னை சந்தித்த பன்னாட்டு பிரதிநிதிகள் குழுவிடமே முதலமைச்சர் நேரடியாக இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் யாழ். வந்த பன்னாட்டு உறுப்பினர்கள் குழு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியது.

இந்த சந்திப்பின் நிறைவில் ஊட கங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமாதானம் குறித்து ஆராய்வதற்காக மேற்படி குழு வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தது. பல நாடுகளை சேர்ந்த அனுபவம் பெற்றவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தார்கள்.

பல்வேறு விதமான கேள்விகளை என்னை நோக்கி கேட்டிருந்தார்கள். இதனடிப்படையில் ஒரு விடயத்தை நான் தெளிவாக கூறியுள்ளேன்.

அதாவது இலங்கையில் இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் உருவாகவேண்டுமானால் இந்த நாட்டில் உள்ளவர்களுடைய மனங்களில் மாற்றங்கள் உருவாக வேண்டும்.

வடகிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களை எப்போதும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும். என தெற்கில் உள்ளவர்கள் விரும்பும் நிலையில் இந்த நாட்டில் நல்லிணக்கம் என்பது உருவாகபோவதில்லை.

இந்த நாட்டில் சகல இன ங்களும் குறிப்பாக தமிழ் மற்றும் சிங்கள இன மக்கள் சரிசமமானவர்கள் என்பதை உணரவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உண்மையான நல்லிணக்கம் உருவாகும் என்பதை கூறியுள்ளேன்.

அதற்கு மேல் வடகிழக்கில் இராணுவம் தொடர்ந்தும் இருப்பதால் உண்டாகும் பாதகங்கள் குறித்தும், மகாவலி அதிகார சபையினால் வடக்கு மாகாணத்திற்கு தண்ணீர் தரும் போர்வையில் சிங்க குடியேற்றங்கள் உருவாக்கப்படுவது குறித்தும் தெளிவாக கூறியுள்ளேன்.

முன்னாள் போராளிகள் தொடர்பாக கேட்டார்கள்,

முன்னாள் போராளிகள் இருவகையாக உள்ளார்கள். ஒருவகை இராணுவத்திடம் சிக்கி பின்னர் இராணுவத்தின் தேவைகளுக்காகவும், இராணுவத்திற்கு தகவல் பெறுவதற்காகவும் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டவர்கள்.

மற்றொருவகை புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள். இந்த வகையில் முதலாவது வகைப்பாட்டினர் தங்களுடைய நலன்களை பெற்றிருந்தாலும் அவர்கள் இன்றளவும் இராணுவத்தின் ஆளுகைக்குள்ளேயே இருக்கிறார்கள்.

மற்ற வகைப்பாட்டினர் சமூகத்துடன் இணைந்திருந்தாலும் மக்கள் அவர்களுடன் பகிரங்கமாக சில விடயங்களில் ஈடுபடுவதற்கு அச்சப்படுகிறார்கள்.

எனவே அவ்வாறான நிலை இருப்பது கூடாது என்பதை சுட்டிக்காட்டியதுடன் சமூகத்துடன் இணைந்த முன்னாள் போராளிகளுக்கு அதிகளவான நன்மைகள் செய்யப்படவே ண்டும் என்பதையும் கூறியுள்ளேன்.

மேலும் இந்த கலந்துரையாடல் சுமுகமான கலந்துரையாடலாக அமைந்தது. என்னை சந்தித்த பன்னாட்டு பிரதி நிதிகளுடைய பின்னணி அவர்கள் என்னோடு பேசியதன் அடிப்படையில் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் குறித்து நாங்கள் உணர்ந்து கொண்டதன் அடிப்படையில் இன்றைய இந்த சந்தி ப்பு எமக்கு நன்மை பயக்கும் என நம்புகிறேன் என முதலமைச்சர் மேலும் கூறினார்.