மைத்திரியின் திட்டங்களை வெளிப்படுத்த அறிவுறுத்து: பரப்புரையில் புதிய யுக்தி

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி செயலகத்தால் பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் காண்பிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள ஜனாதிபதி செயலகத்தால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் சமூக மட்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலகத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காண்பிக்க வேண்டும் என்றும், செயற்றிட்டத்தின் பெயர், அதன் வகை, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற விடயங்களை உள்ளடக்கி விரிவான தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் பிரதேச செயலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.