தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியம் ஏற்பட்டுள்ளது!

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமையொன்றின் அவசியத்தை முன்னிறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில். குறித்து விடயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

“தமிழர்களுக்கான மாற்றுத் தலைமையொன்றின் அவசியம் அண்மைக்காலமாக வலுவாக உணரப்பட்டு வருகின்றது.

தமிழர் உரிமைப்போராட்டங்களிலும், அரசியல் நகர்வுகளிலும் பங்கேற்ற கட்சியொன்றின் தலைவர் என்ற வகையில் அவ்வாறான மாற்றுக்கட்சியொன்றினை தலைமையேற்க ஏன் நீங்கள் உத்தேசிக்கவில்லை? என அந்த ஊடகம் கேளிவியெழுப்பியது.

இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

“இதில் நான் தலைமையேற்பதா அல்லது வேறொருவர் தலைமையேற்பதா என்பதல்ல பிரச்சினை. ஆனால் மாற்றுத் தலைமை ஒன்றுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது மிகச்சரியானதும் வரவேற்கப்படக்கூடிய 0ஒரு விடயம்.

அதற்கான பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு தரப்பினரிடையே இடம்பெறுகின்றனவென்பதும் அறிந்ததுதான்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ் முதலமைச்சர் என்ற கோரிக்கை​யை முன்வைத்து சிலர் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

அதேபோல, வடக்கிலும் மாற்றுத்தலைமையின் அவசியத்தை வலியுறுத்தி சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே யார் தலைமை தாங்குவதென்ற கேள்விக்கப்பால், அவ்வாறான மாற்றுத் தலைமையொன்றின் அவசியத்தை முன்னிறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று” என அவர் மேலும் கூறியுள்ளார்.