புலிகளின் ஆயுதங்களை வைத்திருக்கும் ஐ.தே.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை?

Report Print Jeslin Jeslin in அரசியல்
167Shares

யுத்தம் நிறைவுற்றப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை தம் வசம் வைத்திருக்கும் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் புலிகளிடம் இருந்த ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே சமிந்த விஜேசிறி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஆயுதம் வைத்திருக்க வேண்டியவர்கள் பாதுகாப்புத் துறையினர், இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பவர் ஒருவர் இவ்வாறு ஆயுதங்களை வைத்திருந்தாலும் அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.