இலங்கை மன்னன் துட்டகைமுனுவின் மீள் அவதாரம்! வாள் கொண்டு ஆட்சி நடத்த தயார்

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தாம் வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட போவதாக, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிங்களத்தையும், பௌத்த மதத்தையும் பேணி சகல இனத்தையும் மதத்தையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்யவுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை வீழ்த்த யாரேனும் முயற்சி செய்தால், துட்டகைமுனு அரசனின் வாளை தான் கையிலெடுப்பேன் எனவும் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.