மகிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த பந்துல

Report Print Jeslin Jeslin in அரசியல்

பொருளாதார விடயங்கள் தொடர்பில் திறந்த விவாதம் ஒன்றுக்கு வர முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை – சிங்கப்பூர் ஒப்பந்தம் தொடர்பில் பந்துல குணவர்தன வெளியிட்ட கருத்து தொடர்பில், அமைச்சர் மகிந்த சமரசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்தே இவ்வாறு விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சிங்கப்பூர் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபாவாக நிச்சயம் வீழ்ச்சியடையும் எனவும் பந்துல குணவர்தன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.