நினைவாற்றலை இழந்து போன மஹிந்த!

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பழைய விடயங்களை அனைத்தையும் மறந்து விட்டார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தனக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் நினைவில்லை என குற்ற விசாரணை திணைக்களத்திடம் மஹிந்த கூறியுள்ளார்.

மஹிந்த கூறிய வாக்குமூலங்கள் நேற்றைய தினம் கல்கிஸ்ஸ நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்ற விசாரணை திணைக்களம் கேட்ட கேள்விகளுக்கு நினைவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சாட்சியாளர் இவ்வாறு நினைவில்லை என கூறுவது விசாரணைக்கு தடையை ஏற்படுத்துவதாக அரச சட்ட ஆலோசகர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சாட்சியாளரான மஹிந்தவுக்கு மறந்து போனமை தொடர்பில் ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிபதி, குற்ற விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.