விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் எங்கே? அரசாங்கத்தின் பதில் என்ன?

Report Print Shalini in அரசியல்
314Shares

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை வைத்திருக்க நாம் அனுமதிக்கப் போவதில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதுமபண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகளின் 5000 ஆயுதங்கள் காணாமல் போயுள்ளதாகவும் இவை முஸ்லிம்களிடம் இருப்பதாகவும், இது அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என்றும் அண்மையில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் முன்னாள் போராளிகள் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து ஊடகவியலாளர்களால் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர்,

இந்த நாட்டில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பதற்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை.

அவ்வாறு வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸ் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு எவருக்கும் அவசியம் இல்லை.

முன்னாள் போராளிகள் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதுமபண்டார தெரிவித்துள்ளார்.