நேரலையாக வந்த நாமலை தலைசுற்ற வைத்த கேள்விகள்! மும்மொழிகளிலும் பதில் கொடுத்து அசத்தல்

Report Print Shalini in அரசியல்

தற்போது இலங்கை எதிர்கொள்ளும் பல சிக்கல்களைப் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ முகப்புத்தகத்தில் நேரலையாக வந்துள்ளார்.

இந்த கேள்வி பதில் தொடர் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில மணி நேரங்களில் நாமலிடம் மும்மொழிகளிலும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

இவை அனைத்திற்கும் நாமல் ராஜபக்ஸ உடனுக்குடன் பதில் வழங்கியுள்ளார்.

இந்த கேள்வி - பதில் தொடர் ஆரம்பிக்கும் முன்பே மும்மொழிகளிலும் கேள்விகள் கேட்கலாம் என நாமல் குறிப்பிட்ட போதிலும், தமிழில் நாமலிடம் ஒரே ஒரு கேள்வி மாத்திரமே கேட்கப்பட்டுள்ளது.

“வடக்கு கிழக்கில் உங்களின் எதிர்கால செயற்பாடுகள் எப்போது ஆரம்பமாகும் ??” என தமிழில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு, “பொதுஜன பெரமுன, தேசிய ரீதியான அரசியல் கட்சியாகும். நாட்டின் அனைத்து பாகங்களிலும் எமது கட்சியின் செயல்பாடுகள் நடைபெறுகின்றது. மேலும் வடகிழக்கை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் உங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய எம்மோடு இணையுங்கள்.” என நாமல் தமிழில் பதில் வழங்கியுள்ளார்.

இறுதியில் “இந்த Q & A யில் என்னுடன் இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களோடு இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். முடிந்த வரை அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளேன். விரைவில் மீண்டும் சிந்திப்போம். நன்றி” எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.