மகிந்த பீதியில் நல்லாட்சி அரசாங்கம்: ஜீ.எல்.பீரிஸ்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அச்சத்தில் குழப்பமடைந்து, அப்பாவித்தனமான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறும், நாட்டை கட்டியெழுப்புக் கூடிய ஒரே தலைவர் அவரே என மக்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் இருக்கின்றதா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் விளக்கத்தை அறிய தமது கட்சி தலைமையிலான பல கட்சிகள் ஏகமானதாக தீர்மானித்துள்ள எனவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.