ஜப்பானுடன் பாதுகாப்பு பரிந்துணர்வு உடன்படிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மற்றும் ஜப்பான் இடையில் பாதுகாப்பு தொடர்புகளை வலுப்படுத்தி, பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இத்சூனோரி ஒனேடோராவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடயில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இங்கு கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்னும் 20 வருடங்களில் வங்காள விரிகுடாவை அண்மித்துள்ள நாடுகள் துரிதமாக வளர்ச்சியடையும் எனக் கூறியுள்ளார்.

இதற்கு அமைய பிராந்தியத்தின் கேந்திர துறைமுகமான திருகோணமலை துறைமுகம் மாறும். இலங்கையின் துறைமுகங்களின் வளர்ச்சிக்கு ஜப்பானின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், திருகோணமலை பிரதேசத்திற்கு விஜயம் செய்து, அந்த பிரதேசம் மற்றும் திருகோணமலை துறைமுகம் தொடர்பில் ஆராய்ந்து புரிதலை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜப்பான் தற்போது அடைந்துள்ள அபிவிருத்திக்காக இலங்கை ஜப்பானுக்கு கடந்த காலத்தில் இருந்து வழங்கிய உதவிகளையும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நினைவுகூர்ந்துள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.