யாழ்ப்பாணத்தில் 22 நகரங்கள்: அதி முக்கியச் செய்தியை வெளியிட்டார் ராஜித

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் சுமார் 100 நகரங்களில் சிகரட் விற்பனையில் இருந்து விலகிக்கொள்ள வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்த தகவலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களின் பின்னர் வர்த்தகர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இதில் யாழ்ப்பாணத்தின் 22 நகரங்கள், மாத்தறையின் 17 நகரங்கள், குருணாகலயின் 16 நகரங்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நகரங்கள் 2019ஆம் ஆண்டு வரும்போது 200ஆக உயரும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் வெளியிட்டார்.

இதேவேளை 2020ஆம் ஆண்டளவில் புகைப்பிடிக்கும் உற்பத்தியை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.