மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்த்தான் பிரஜைகள் தொடர்பில் மைத்திரியின் திடீர் முடிவு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து பாகிஸ்தானிய பிரஜைகளை அந்த நாட்டுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கைககள் எடுக்கப்படுகின்றன.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து இது தொடர்பான தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் 18 பேர் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.