போர்க்கப்பல்களை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை, அமரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து போர்க்கப்பல்களை கொள்வனவு செய்யவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அதிகாரிகள் இது தொடர்பில் அமெரிக்காவில் பேச்சுவார்த்தைகளை இந்த வாரத்தில் நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு வந்துள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரும் இலங்கைக்கு இரண்டு போர்க்கப்பல்களை வழங்க உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.