யுத்த பாதிப்புக்குள்ளாகிய முல்லைத்தீவு மாணவர்களின் மனங்களில் இருந்து வெளிப்படும் நல்லிணக்கம்

Report Print Mohan Mohan in அரசியல்

இலங்கையில் இன மத பேதமின்றி அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை செம்மலை மகாவித்தியாலய மாணவர்களின் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

முல்லைத்தீவு செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் சமுதாய அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று நடத்தப்பட்ட சமயங்கள் ஊடாக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் புகைப்பட கண்காட்சி போட்டியின் போது செம்மலை மகா வித்தியாலய மாணவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் செம்மலை மகா வித்தியாலய முதல்வர் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு - செம்மலை மகாவித்தியாலயம் கடந்த கால யுத்தத்தின் போது கடும் சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது.

தற்பொழுது புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் இந்த பாடசாலையில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாணவர்களே கல்வி கற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த கால கசப்பான நினைவுகளின் மத்தியில் மாணவர்கள், நாட்டு மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை புகைப்படங்களின் ஊடக வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கு சந்தர்ப்பம் வழங்கிய சமுதாய அபிவிருத்தி நிறுவனத்திற்கு நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் சமுதாய அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று நடத்தப்பட்ட சமயங்கள் ஊடாக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் புகைப்பட கண்காட்சி போட்டியின் போது செம்மலை மகாவித்தியாலய மாணவர்களின் புகைப்படங்கள் முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.