பௌத்த சமயமே நல்லிணக்கத்திற்கு தலைமைத்துவம் வழங்குகிறது

Report Print Steephen Steephen in அரசியல்

பௌத்தம் பலவந்தமாக எவரையும் மதத்தில் இணைந்து கொள்ளுமாறு வற்புறுத்தும் சமயம் அல்ல எனவும், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு பௌத்த சமயமே தலைமைத்துவம் வழங்குகிறதாகவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு கால போரில் கடுமையாக சேதமடைந்த யாழ்ப்பாணம், காங்கேசன்துறை திஸ்ஸ விகாரையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நேற்று வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரே நாட்டி வைத்தார்.

இதன் பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

பௌத்த சமயத்தை தவிர உலகில் வேறு எந்த வழிப்பாட்டு தலங்களிலும் தெய்வங்களின் படங்கள் அல்லது வேறு மத தலைவர்களில் படங்கள் வைக்கப்படுவதில்லை என்பதுடன் வழிப்பட வாய்ப்பில்லை.

எனினும் பௌத்த சமயத்திற்கு அப்படியான வரையறைகள் கிடையாது. பௌத்தம் பலவந்தமாக எவரையும் மதத்தில் இணைந்து கொள்ளுமாறு வற்புறுத்தாது. இதனடிப்படையில் நோக்கினால், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு பௌத்த சமயமே தலைமைத்துவம் வழங்குகிறது என்பது தெளிவானது.

நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த விகாரை, எதிர்காலத்தில் தமிழர்கள் தர்ம உபதேசங்களை கேட்கவும், துறவரம் பூணும் இடமாகவும் மாற வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

மேலும் இந்த இடம் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான வேற்றுமையை உருவாக்காத இடமாக இருக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன். அத்துடன் இந்த இடம் மனிதாபிமானம் மற்றும் நல்லிணக்கத்தின் வேறாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.

இன, மத, ஜாதி பேதங்கள் இன்றி புத்த பகவானினால் செயற்பட முடிந்தது என்றால், அந்த மதத்தை பின்பற்றும் எமக்கு பேதங்கள் இன்றி செயற்பட முடியும்.

சீன பௌத்தம், தாய்வான் பௌத்தம், பர்மா பௌத்தம், தாய்லாந்து பௌத்தம், ஜப்பான் பௌத்தம் என எங்கு பௌத்தம் இருந்தாலும் பௌத்த தர்மத்தில் மாற்றங்கள் இல்லை. பௌத்தம் எங்கிருந்தாலும் எங்கு பரவினாலும் ஒரே தர்மம்.

இதேவேளை, மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு உலகில் சம தர்மத்தின் போதனைகள் புத்த பகவான் மூலமே கிடைத்தன. விகாரை என்பது வேறு மதங்களையும், வேறு இனங்களையும் சவாலுக்கு உட்படுத்தும் இடமாக இருக்கக் கூடாது எனவும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.