தனியார் வைத்தியசாலை செல்லும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Shalini in அரசியல்

இலங்கையில் தனியார் வைத்தியசாலைகளின் 53 மருத்துவ கட்டணங்களுக்கு நிர்ணயத் தொகை விதிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சத்திரசிகிச்சை, ஆய்வுக்கூட கட்டணங்கள், குழந்தை பிரசவம் உள்ளிட்டவற்றுக்கான மருத்து கட்டணங்களும் இந்த நிர்ணய விலையில் உள்ளடக்கப்படுகின்றன.

அடுத்த வாரம் முதல் இந்த நிர்ணயத் தொகை விதிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கட்டணங்களுக்கான நிர்ணயத்தொகை அடங்கிய பட்டியலை நிறைவுசெய்து விரைவில் அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து அறிக்கை கிடைத்தவுடன், அதனை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.