ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார் மகிந்தவின் மைத்துனர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் நடந்த முறைகேடு சம்பந்தமான விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்க நிஷாந்த மற்றும் கபில சந்திரசேன ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.

குறித்த விசாரணைக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோர் இன்று காலை 8 .30 அளவில் குறித்த முறைக்கேடு விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

ஆணைக்குழுவில் இணைந்து பணியாற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் இவர்கள் வாக்குமூலம் வழக்குவதற்காக ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா, ஸ்ரீலங்கன் கேட்ரிங் ஆகிய நிறுவனங்களில் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல், முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, கடந்த மே மாதம் முதல் சாட்சிங்களை பதிவு செய்து வருகிறது.

ஆணைக்குழுவில் சாட்சியாளர்கள் வழங்கிய சாட்சியங்களுக்கு அமைய இவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

நிஷாந்த விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.