நாட்டு மக்களுக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுத்த கம்மன்பில

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் 5 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படும் என்றும், கொழும்பு நகருக்கு வர வேண்டாம் எனவும் உதய கம்மன்பில் தெரிவித்த கருத்து நாட்டு மக்களின் சிவில் உரிமைகளை சவாலுக்கு உட்படுத்துகின்றது என்று ராஜாங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உதய கம்மன்பில இவ்வாறு கூறியிருப்பது நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட மறைமுக அச்சுறுத்தல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கம்மன்பில, இப்படியான கருத்துக்களை வெளியிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.