கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்களுக்கு சரியான முறையில் பயன்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும் இதுவே எமது கட்சி தலைமையின் விருப்பு என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுவதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்ட கட்சியின் செயற்பாட்டாளர்கள் சந்தித்த போது அவர்களின் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சமகாலத்தில் மக்கள் வாழ்வில் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அவர்களது வாழ்வியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவும் கரங்களாக நாம் மாற வேண்டும்.
அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை வெளியில் கொண்டு வந்து குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைக்கும் வகையில் வழிவகைகள் செய்ய வேண்டும் இதுவே இன்று அரசியல் கட்சிகளிடம் எதிர்பார்க்கும் விடயமாக இருக்கிறது.
கடந்த காலங்களில் இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் எமது கட்சி கூடுதல் அக்கறை கொண்டு பல்வேறு துயர் துடிப்பு பணிகளை மக்களுக்கு ஆற்றி வருகிறது.
சமகாலத்தில் கிராம மட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சவால்களை வெளிக்கொண்டு வருபவர்கள் செயற்பாட்டாளர்கள் மாற வேண்டும் எனவும் எமது கட்சியின் மக்களோடு நாம் என்ற செயல்திட்டத்தின் கீழ் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க நாம் அணிதிரள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குறித்த ஒன்று கூடலில் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனவைரும் ஒன்று கூடினர்.