வடக்கில் பெரியளவில் பௌத்த மத தலங்கள் அழிப்பு நடைபெறுவதாக தான் நினைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வடக்கில் விகாரைகள் பௌத்த தலங்கள் அழிக்கப்படுவதாக போராட்ட கோஷம் எழுப்பப்படலாம். ஆனால், அவ்வாறு பாரிய அழிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக நான் எண்ணவில்லை.
சிறிய, சிறிய சம்பவங்கள் நடக்கலாம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இது பற்றி கூறியிருந்ததை பார்த்தேன். எனினும் தேடிப் பார்க்க வேண்டும். எனினும் அப்படி நடந்தால், அது நிறுத்தப்பட வேண்டும்.
வடக்கில் நயினாதீவு என்ற பெயரை அப்படியே எழுத வேண்டும் என்று கூறுகின்றனர். எனினும் அவர்கள் அப்படி எழுதிக் கொள்ளட்டும். எமக்கு அது நாகதீப தான் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.