புதிய முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளைய தினம் கொண்டு வரப்படும் எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவாக தமது கட்சி வாக்களிக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டுமாயின் புதிய தேர்தல் முறை இடைநிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் அறிக்கை தொடர்பான யோசனைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கு கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தோல்வியான அரசாங்கம், தேர்தலை ஒத்திவைக்க, அரசாங்கமே கொண்டு வந்த புதிய தேர்தலை முறையுடன் சம்பந்தப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றாமல் தடுக்க மற்றுமொரு வழிமுறையை பயன்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, புதிய தேர்தல் முறையை உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் பழைய தேர்தல் முறை தேவை எனக் கூறுகிறது.

எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் புதிய தேர்தல் முறை அவசியம் எனக் கூறி வருவதால், அரசாங்கத்திற்குள் பிரச்சினை இருப்பதை காட்டுகிறது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.