நகர சபை உறுப்பினர் சம்பளப் பணம் மக்கள் சேவைக்காக

Report Print Gokulan Gokulan in அரசியல்

கிண்ணியா நகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி உறுப்பினர் முஹம்மட் அனீஸ் தனது சம்பளப் பணத்தின் மூலம் மஹ்ரூப் நகர் ஜலாலியா பள்ளிவாசல் வீதியின் காணின் இரு மருங்கையும் கொங்ரீட் இட்டு செப்பனிடும் பணியை இன்று ஆரம்பித்து வைத்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினரான அனீஸ் கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது பட்டியல் முறை மூலமாக கிண்ணியா நகர சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.எம்.நசூர்தீன் மற்றும் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயற்குழுவின் செயலாளர் ஏ.ஆர்.முபீத், தேசிய செயற்குழு உறுப்பினர் நாஸீக் மஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.