ராஜபக்ச அணியின் முயற்சிக்கு ஜே.வி.பி உதவாது - பிமல் ரத்நாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கமாக இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருவதை தாம் பொருட்படுத்துவதில்லை என அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மைத்திரி - ரணில் மற்றும் ராஜபக்ச தரப்பை எதிர்க்கும் பொது சக்திக்கு தமது கட்சி தலைமை தாங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ச தரப்பின் கொள்ளையர் அணியும் அந்த அணிக்கு ஆதரவான ஊடகங்களும், மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளித்து வருவதாக கூறினாலும் அதனை நாங்கள் எந்த வகையிலும் பொருட்படுத்துவதில்லை.

நாங்கள் ஐக்கிய தேசியக்கட்சியிருடன் இல்லை. எமது கட்சியே மத்திய வங்கியில் இடம்பெற்ற சம்பவத்தை வெளிகொண்டுவந்தது.

அதேபோல் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது எமது கட்சியே ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்தது. மக்கள் விடுதலை முன்னணி அனைத்து வரவு செலவுத் திட்டங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச ஒரு வரவு செலவுத் திட்டத்திற்கு கூட தனது வாக்கை பயன்படுத்தியதில்லை. இதனால், மக்கள் விடுதலை முன்னணிக்கு குத்தப்படும் முத்திரை குறித்து நாங்கள் அஞ்சப் போவதில்லை.

அத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கும் ராஜபக்ச அணிக்கு அதற்கான உதவியை எந்த வகையிலும் மக்கள் விடுதலை முன்னணி வழங்காது எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers