கொழும்பில் வைத்து பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

2014 - 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொலிஸ் அறிக்கைக்கு அமைய, நாட்டில் குற்றச் செயல்கள் 35 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு - பம்பலப்பிட்டியில் உள்ள பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற 152ஆவது தேசிய பொலிஸ் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

எனினும் குற்றச் செயல்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பது 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2014இல் 50ஆயிரத்து 962 குற்றச்செயல்கள் பதிவாகியிருந்த நிலையில், அவற்றுள் 58 சதவீதமானவற்றுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

இதேநேரம், 2017இல் 35ஆயிரத்து 971 குற்றச்செயல்கள் பதிவாகியிருந்த நிலையில், அவற்றில் 78 சதவீதமானவற்றுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.