மகிந்த தலைமையில் நடைபெறும் மந்திராலோசனை

Report Print Ajith Ajith in அரசியல்

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள 'மக்கள் அலை கொழும்பு குயில்' என்ற எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று மாலை கொழும்பில் உள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று மதியம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டமும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers